மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை | Southwest monsoon intensity | Nilgiris, Covai
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை | Southwest monsoon intensity | Nilgiris, Covai | Oranch Alert நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பலமான தரைகாற்று மற்றும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.