உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தேசிய விருது வழங்கி படைப்பாளர்கள் கவுரவிப்பு | Sri Dharshini Kalai Koodam

தேசிய விருது வழங்கி படைப்பாளர்கள் கவுரவிப்பு | Sri Dharshini Kalai Koodam

தேசிய விருது வழங்கி படைப்பாளர்கள் கவுரவிப்பு | Sri Dharshini Kalai Koodam | 20th year Anniversary National Award Ceremony | Chennai சென்னையில் உள்ள டாக்டர் ஜெ ஜெயலலிதா இசைக் கல்லுாரி பல்கலையின் கட்டுப்பாட்டில் கீழ் ஸ்ரீதர்ஷினி கலை கூடம் செயல்படுகிறது. இதன் 20வது ஆண்டு விழாவையொட்டி தேசிய விருது வழங்கும் விழா டி.நகர் வாணி மகாலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை கருணாநிதி எம்எல்ஏ குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சாலை திட்ட இயக்குனர் S.A.ராமன் IAS, யுனஸ்கோ விருதாளர் பத்மஸ்ரீ முத்துசாமி, கலை மற்றும் கலாச்சாரத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன் மற்றும் ஜெயலலிதா இசைக் கல்லுாரி முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல் பங்கேற்றனர். இசை, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் சாதனை படைத்த படைப்பாளர்களுக்கு ஸ்ரீதர்ஷினி கலை கூடம் சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. breath: விழாவில் திமுக கவுன்சிலர் எழுமலை, ஓவிய கலைஞர் துரை, திமுக நிர்வாகிகள் மாரி, ஜெயகுமார், சம்பத், இசை கலைஞர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். ஸ்ரீதர்ஷினி கலை கூடம் HOD தர்மலிங்கம் நன்றி கூறினார்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை