உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / ரத்து செய்து தேவஸ்தானம் உத்தரவு | Tirupati | Department of Tourism | Tirupati Devasthanam

ரத்து செய்து தேவஸ்தானம் உத்தரவு | Tirupati | Department of Tourism | Tirupati Devasthanam

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநில சுற்றுலாத்துறையின் மூலம் தரிசன டிக்கெட் கோட்டா முறையில் வழங்கப்பட்டு வந்தது. தெலுங்கானா, ஆந்திராவுக்கு தினமும் 1000 டிக்கட்டுகள், கர்நாடகாவிற்கு 750, கேரளாவிற்கு 250, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தலா 500 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. பக்தர்கள் நேரடியாக அந்தந்த மாநில சுற்றுலாத்துறை இணையத்தில் முன்பதிவு செய்து பெற்று கொள்ளும் வசதி செய்யப்பட்டு இருந்தது. தரிசன டிக்கெட்டுக்களை புரோக்கர்கள் மொத்தமாக பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு அனைத்து மாநில சுற்றுலாத் துறைக்கும் வழங்கப்பட்ட தரிசன டிக்கெட்களை வரும் 1ம் தேதி முதல் ரத்து செய்து உத்தரவிட்டது. அதேபோல் ஆந்திரா போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 1000 முதல் 2000 டிக்கெட் வரை அரசு போக்குவரத்துக் கழக பஸ் முன்பதிவின் போது 300 ரூபாய் சலுகை கட்டணத்தில் வழங்கப்பட்ட தரிசன டிக்கெட்களும் ரத்து செய்யப்பட்டன.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !