/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ தேவாலயத்திற்கு சென்ற போது நேர்ந்த சோகம் | Truck hits two-wheeler Father and son died
தேவாலயத்திற்கு சென்ற போது நேர்ந்த சோகம் | Truck hits two-wheeler Father and son died
சென்னை செனாய் நகர் வெங்கடாசலம் 3வது தெருவை சேர்ந்தவர் ராபர்ட் வயது 52. இவரது மகன் சாமுவேல் வயது 20. இவர் பிடெக் 2ம் ஆண்டு படித்தார். இருவரும் அடையாளம் பட்டு தேவாலயத்திற்கு டூவீலரில் சென்றனர். தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் சென்றபோது எதிரே வேகமாக வந்த கழிவுநீர் லாரி டூவீலர் மீது மோதியது. இதில் தந்தையும், மகனும் படுகாயமடைந்து ஸ்பாட்டிலேயே பலியாகினர். விபத்தை ஏற்படுத்திய கழிவுநீர் லாரி டிரைவர் மாரியப்பன் கைது செய்யப்பட்டார்.
பிப் 12, 2024