/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ கோயில் நிர்வாகம் வழங்கியது |Vadapalani Andavar Temple | Vinayagar statue distribute
கோயில் நிர்வாகம் வழங்கியது |Vadapalani Andavar Temple | Vinayagar statue distribute
சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் நிர்வாகம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2019 முதல் ஒருங்கிணைந்த விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், எருக்கம் மாலை, அருகம்புல், பூஜை வழிபாட்டு முறைகள் அடங்கிய கையேடு அறநிலையத்துறை சார்பில் கோயில் நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்பட்டது. அதோடு விநாயகர் சதுர்த்தி விழாவும் கோயிலில் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
செப் 06, 2024