உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / வண்டலூர் பூங்காவில் நடக்கும் மர்மம் என்ன? | vandalur zoo | vandalur zoo animal escape | chennai

வண்டலூர் பூங்காவில் நடக்கும் மர்மம் என்ன? | vandalur zoo | vandalur zoo animal escape | chennai

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பல வகையான விலங்குகளை பார்வையிட மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். காட்டு மாடு பெருக்கத்தில் பூங்கா சிறந்து விளங்குகிறது. 30க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் உள்ளன. இதற்கான வளாகத்தில் கட்டுமான பணி நடக்கிறது. மாடுகளை காட்டுக்குள் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கும் வகையில் சஃபாரி துவங்க ஏற்பாடு நடக்கிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காட்டு மாடு ஒன்று தப்பி ஓடி விட்டது. அனுபவமில்லாத ஊழியர் கேட்டை திறந்து மூடும் போது காட்டு மாடு தப்பியதாக கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகம் விசாரிக்கிறது. காட்டு மாடை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2 வாரங்கள் முன்பு தான் அனுமன் குரங்குகள் சில தப்பி ஓடின. தேடுதல் பணிக்கு பிறகு 2 குரங்குகள் மட்டும் மீட்கப்பட்டன. அடுத்தடுத்து விலங்குகள் தப்பி ஓடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூங்கா நிர்வாகம் மீதும் விமர்சனம் எழுந்துள்ளது.

மார் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !