போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் | Chennai | Vehicles crawling in traffic
பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புகின்றனர். இதனால் அனைத்து ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி கிடந்த அனைத்து ரோடுகளிலும் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தாலும், ஏராளமானோர் கார்களின் வருவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இயலவில்லை நெரிசலை குறைப்பதற்காக சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு அருகே வாலாஜாபாத் வழியாக சென்று சென்னை வருகின்றன. பாதுகாப்பு பணியில் செங்கல்பட்டு, தாமரை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.