உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / இலவச இன்டர்நெட் வசதியுடன் ஆப் அறிமுகம் | Tirupati | Venkataadri App | Guide Devotees at Tirumala

இலவச இன்டர்நெட் வசதியுடன் ஆப் அறிமுகம் | Tirupati | Venkataadri App | Guide Devotees at Tirumala

இலவச இன்டர்நெட் வசதியுடன் ஆப் அறிமுகம் | Tirupati | Venkataadri App | Guide Devotees at Tirumala திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பல்வேறு மாநில பக்தர்களுக்கு 5 மொழிகளில் வெங்கடாத்திரி எனும் புதிய ஆப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலி மூலம் திருமலையில் 100க்கும் மேற்பட்ட முக்கிய இடங்கள், கிடைக்கும் வசதிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். அறைகள், இலவச லாக்கர், அன்ன பிரசாத மையம், நுழைவு தரிசனம், இலவச பஸ், பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் வழிக்காட்டியாக ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. திருமலையில் சிக்னல் பிரச்சனைகள் இருந்தாலும், பக்தர்களின் மொபைலில் இன்டர்நெட் சேவை இல்லாவிட்டாலும் செயலி ஆஃப் லைனில் தடையின்றி செயல்படும். இந்த புதிய ஆப் நன்கொடையாளர் ஜெயபிரகாஷ் குழுவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. செயலியை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கருட சேவை அன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

அக் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ