உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / முதல் விமான பயணம் ஆச்சர்யமா இருந்துச்சு | Chennai | View Assembly proceedings Government school

முதல் விமான பயணம் ஆச்சர்யமா இருந்துச்சு | Chennai | View Assembly proceedings Government school

முதல் விமான பயணம் ஆச்சர்யமா இருந்துச்சு | Chennai | View Assembly proceedings Government school students மதுரை மாவட்டம் ரோட்டரி கிளப் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் சட்டசபை நிகழ்வுகளை காண அழைத்து வரப்பட்டனர். இதற்காக மதுரை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த அனைத்து மாணவர்களின் பெயரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதில் ஒரு அரசு பள்ளிக்கு ஒரு மாணவர் என்ற அடிப்படையில் 9 மாநகராட்சி பள்ளி மாணவர்கள், ஒரு அரசு பள்ளி மாணவர் என 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை விமானத்தில் அழைத்து வந்தனர். விமான நிலையத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்கு மெட்ரோ ரயில் மூலமாக சட்டசபைக்கு சென்றனர். சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து விட்டு, மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பின்னர் பஸ் மூலம் மதுரை திரும்புகின்றனர்.

ஜூன் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை