உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தனியே தன்னந்தனியே விஜய் எங்கே போகிறார்?

தனியே தன்னந்தனியே விஜய் எங்கே போகிறார்?

தனியே தன்னந்தனியே விஜய் எங்கே போகிறார்? / Chennai / Vijay left home / where is he going? / The mystery continues கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே சோகத்தில் உலுக்கிய இச்சம்பவம் நடந்து 11 நாட்களாகியும் இதுவரை உயிரிழந்த குடும்பங்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. உயிரிழந்தவர்களுக்கு அறிவித்த நிவாரண தொகையும் வழங்கவில்லை. துயர சம்பவம் நடந்து 11 நாட்களாக சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து பட்டினப்பாக்கம் வீட்டிற்கும் பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்து நீலாங்கரை வீட்டிற்கும் மாறி மாறி விஜய் சென்று வந்தார். இன்று காலை நீலாங்கரை வீட்டில் இருந்து பட்டினப்பாக்கம் வீட்டிற்கு செல்வதாகக் கூறி புறப்பட்டார். அவருடன் ‛Y பிரிவு பாதுகாப்பு படையினர் உடன் செல்லவில்லை. Y பிரிவுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றால் அவர் செல்லும் இடம் பப்ளிசிட்டி ஆகி விடுகிறது என்பதால் விஜய் Y பிரிவு இல்லாமல் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. கரூர் செல்ல காவல்துறையிடம் விஜய் தரப்பில் மனு அளித்துள்ள நிலையில் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய் எங்கே செல்கிறார் என யாருக்கும் தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி