உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் | Chennai | Dharma Vinayagar Dharmaraja Temple

காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் | Chennai | Dharma Vinayagar Dharmaraja Temple

காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் | Chennai | Dharma Vinayagar Dharmaraja Temple Dimithi festival சென்னை மன்னடி லிங்கி செட்டி தெரு தர்ம விநாயகர் தர்மராஜா கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 14 ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் கணபதி ஹோமமும், மூன்றாம் நாள் கருட சேவை, தொட்டி உற்சவம், திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா நடைபெற்றது. 10 ம் நாள் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ முத்தாளம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காப்பு கட்டிய பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து கோயிலில் இருந்து தம்புச்செட்டி தெரு, லிங்கி செட்டித் தெரு வழியாக ஊர்வலம் வந்தனர். கரகம் எடுத்து வந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர். அதனை தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மண்ணடி ,முத்தியால்பேட்டை, தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜூன் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ