உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / ஓட்டல் பில் கட்டாமல் நழுவ இயக்குனர்களை மிஞ்சிய யோசனை! நடிகர்களை மிஞ்சிய ஆக்டிங் | viral cctv video

ஓட்டல் பில் கட்டாமல் நழுவ இயக்குனர்களை மிஞ்சிய யோசனை! நடிகர்களை மிஞ்சிய ஆக்டிங் | viral cctv video

பூந்தமல்லி லட்சுமிபுரம் ரோட்டில் வடமாநில இளைஞர்கள் சேர்ந்து ஓட்டல் நடத்தி வருகின்றனர். இங்கு வியாழன் இரவு ஒருவர் சாப்பிட வந்தார். சிக்கன் ரைஸ், சிக்கன் லாலிபாப் ஆர்டர் செய்தார். உடனே அவர் கேட்டதை தயார் செய்து பரிமாறினார். அவரும் அதை ருசித்து சாப்பிட்டார். உணவு காலியாக போகும் தருவாயில் சிக்கன் ரைசில் முடி கிடப்பதாக கூறி வாக்குவாதம் செய்தார். அந்த முடியை பார்த்தபோது முன்பே விழுந்தது போல் இல்லை. ஓட்டல் நடத்தும் வடமாநில இளைஞர்களுக்கு சந்தேகம் வந்தது. இருப்பினும் அந்த ஆசாமியிடம் வருத்தம் தெரிவித்தனர். அவரிடம் சிக்கன் ரைஸ், சிக்கன் லாலிபாப்புக்கு பணமும் வாங்கவில்லை. வடமாநில இளைஞர்களை திட்டியபடி அவரும் சென்று விட்டார். வடமாநில இளைஞர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. ஓட்டலில் பொறுத்தி இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அதிர்ச்சியில் உறைந்தனர். சாப்பாடு காலியாகும் தருவாயில் ஆசாமியே தனது தலை முடியை பிடுங்கி உணவில் கலக்கும் காட்சி இருந்தது. போதுமான அளவு சாப்பிட்ட பிறகு பில் கொடுக்காமல் தப்பிக்கவே ஆசாமி இப்படி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக இளைஞர்கள் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடக்கிறது.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை