/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ பக்கத்து வீட்டை அபகரிக்க பெண் டிஎஸ்பி மிரட்டல் | Women DSP caught in land grabbing complaint
பக்கத்து வீட்டை அபகரிக்க பெண் டிஎஸ்பி மிரட்டல் | Women DSP caught in land grabbing complaint
மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த கஸ்தூரிகலா என்பவர் மகன் குடும்பத்துடன் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர்களது வீட்டுக்கு அருகே மதுரை டிஎஸ்பி வினோதினி, 3 சென்ட் நிலம் வாங்கி சில மாதங்களுக்கு முன் வீடு கட்டினார். பக்கத்தில் உள்ள கஸ்தூரிகலாவின் வீட்டுடன் கூடிய 7 சென்ட் நிலத்தை அபகரிக்க நினைத்த டிஎஸ்பி வினோதினி, வீட்டை விற்கும்படி மிரட்டுவதாக கஸ்தூரிகலாவின் மகன் கிருஷ்ணகுமார் கூறினார். இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அவர்கள் புகார் அனுப்பி உள்ளார். வீட்டை விற்க சொல்லி உள்ளூர் அரசியல்வாதிகள் மூலம் டிஎஸ்பி கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவருக்கு ஆதரவாக போலீசாரும் மிரட்டி நிர்பந்திப்பதாகவும் புகாரில் கூறியுள்ளனர்.
ஆக 23, 2024