இந்தியவீரர்கள் 9 தங்கம், 4 வெள்ளி,11வெண்கலம் வென்றுஅசத்தல் |Chennai | World CupKickboxing Tournament
இந்திய வீரர்கள் 9 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் வென்று அசத்தல் / Chennai / World Cup Kickboxing Tournament உஸ்பெகிஸ்தான் கிக் பாக்சிங் சங்கம், வாக்கோ உலக கிக் பாக்சிங் கூட்டமைப்பு சார்பில், உலக கோப்பைக்கான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் அக்டோபர் 7ந் தேதி முதல் நடைபெற்றது. சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இந்தியா உட்பட 40 நாடுகளைச் சேர்ந்த 2,900 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவுக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் 5 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். நாடு திரும்பிய வீரர்களுக்கு சென்னை விமானத்தில் வந்தனர், உறவினர்கள், விளையாட்டு ஆர்வலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.