11 பழங்குடி கிராம பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா கடந்த பிப்ரவரி 6ம் தேதி பொன்னாலம்மன் கோயில் சென்று அம்மனை அழைத்து உத்தரவு வாங்குதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி கொடியேற்றம் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மார் 03, 2024