கம்பீரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கோவை இடையார்பாளையம் அண்ணா நகர் கம்பீரசித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கௌரமடாலய சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கடம் புறப்பாடானது. கோயில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அறங்காவல் குழு தலைவர் ராஜாமணி, அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜூன் 10, 2024