உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்தியன் வங்கி அணி, இந்திய ராணுவ அணி அசத்தல் வெற்றி Coimbatore Men's Basketball Tournament

இந்தியன் வங்கி அணி, இந்திய ராணுவ அணி அசத்தல் வெற்றி Coimbatore Men's Basketball Tournament

பி.எஸ்.ஜி ஸ்போர்டஸ் கிளப் சார்பில் 58வது பி.எஸ்.ஜி கோப்பைக்கான போட்டி பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியன் வங்கி அணி 73 - 54 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியன் ரயில்வே அணியை வீழ்த்தியது. இந்தியன் வங்கி அணியின் பிரணவ் பிரின்ஸ் அதிகபட்சமாக 22 புள்ளிகள் எடுத்தார். மற்றொரு போட்டியில் இந்திய ராணுவ அணி 68 - 58 என்ற புள்ளிக்கணக்கில் மத்திய செயலகம் அணியை வீழ்த்தியது. இந்திய ராணுவ அணி வீரர் சாகில் 18 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை