உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அழிவின் விளிம்பில் தமிழக மாநில வன விலங்கு வரையாடுகள் Drafts on the brink of Tahr Gudalur

அழிவின் விளிம்பில் தமிழக மாநில வன விலங்கு வரையாடுகள் Drafts on the brink of Tahr Gudalur

நீலகிரி மாவட்டம் முதுமலை முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நம் மாநில விலங்கான வரையாடுகள் அதிகளவில் உள்ளன. முக்கூர்த்தியில் 2018ல் நடந்த கணக்கெடுப்பு படி 568 வரையாடுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. புல்வெளி பகுதிகளை வாழ்விடமாக கொண்ட இவை தற்போது அழியும் வன விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. புல்வெளிகள் பகுதிகள் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு களைச் செடிகள் அதிகரிப்பு, வனத்தீ போன்ற காரணங்களால் இவற்றின் வாழ்விடம் சுருங்கி விட்டது. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை