நாள் சம்பளம் ₹336; தருவதோ ₹283 | 100 Days Work | Salary Fraud | BJP Protest | Palladam | Tripur
நாள் சம்பளம் ₹336; தருவதோ ₹283 / 100 Days Work / Salary Fraud / BJP Protest / Palladam / Tripur நூறு நாள் வேலை உறுதி திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக அவதுாறு பரப்பப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை தொழிலாளர் ஒருவருக்கு நாள் சம்பளமாக 336 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் ஊழல் பெருச்சாளிகள் உழைப்பாளிகளின் உழைப்பை சுரண்டும் விதமாக நாள் சம்பளமாக 283 ரூபாய் மட்டுமே வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு நிதி பல கோடியை ஊழல் அதிகாரிகள் மாதம் தோறும் அபகரித்து வருவதாக பாஜக சார்பில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பிரதீப் சக்தி தலைமையில் 100 நாள் வேலை தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. speech: பிரதீப் சக்தி தலைவர், பல்லடம் ஒன்றியம், பாஜக 00:01 - 01:43 தங்களுக்கு மத்திய அரசு வழங்கும் சம்பளத்தை முழுமையாக கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தினர். குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் பலரும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்புவோம் என தொழிலாளர்கள் உறுதியளித்தனர். 100 நாள் வேலை திட்டத்தில் மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக பாஜக நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை தொழிலாளர்கள் வரவேற்றனர்.