உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உயரமான பாலத்தில் ஓவர்டேக்... விபத்து நிச்சயமுங்க...

உயரமான பாலத்தில் ஓவர்டேக்... விபத்து நிச்சயமுங்க...

கோவையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்களிலேயே அதிக வாகனங்கள் செல்வதாக கூறப்படும் காந்திபுரம் 2-வது அடுக்கு பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன. நவஇந்தியா சிக்னலையும். காந்திபுரம் 100 அடி சாலையையும் இணைக்கும் இந்த மேம்பாலம் 1.75 கி.மீட்டர் நீளம் உள்ளது. 8.5 மீட்டர் அகலம் கொண்டது. ஒரு வாகனம் போகலாம். ஒரு வாகனம் வரலாம் என்ற அளவில் காலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடக்கின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் ஓவர் டேக் செய்தால் எதிரில் வரும் வாகங்களுடன் மோதும் நிலை தான் தற்போது உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த மேம்பாலத்தில் நடக்கும் விபத்துக்களையும், இறப்பையும் குறைக்க போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலை துறையின் சாலை பாதுகாப்பு குழுவினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

பிப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி