16 வயசு சின்ன பையன் கண்டக்டரா? மடக்கி பிடித்த போலீஸ்... என்னங்க நடக்குது கோவையில் | Coimbatore
கோவை மாநகரில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில், 16 வயது சிறுவன் கண்டக்டராக பணிபுரிந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளியிலிருந்து ஒண்டிப்புதுார் வரை காந்திபுரம் வழியாக தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளில் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார் வந்தது. இது தொடர்பாக அதிகாரிகளும் விசாரணையில் இறங்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காந்திபுரத்தில் வடவள்ளிக்கு புறப்பட தயராக இருந்த பேருந்தில், பயணிகள் கூட்டம் அலைமோதியது. அப்போது காட்டூர் காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்.ஐ., ஜெயக்குமரன் மற்றும் போலீசார் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டனர். திடீரென, கண்டெக்டர் மீது சந்தேகம் ஏற்பட, அவரை அழைத்து விசாரித்தனர். அதில், அவருக்கு 16 வயது என்பது உறுதியானது. உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். 16 வயது சிறுவன் பஸ் கண்டக்டராக பணியாற்றிய பரபரப்பு சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.