உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ₹2.227 கோடி ஹவாலாபணம் போலீஸ் பறிமுதல் | ₹2.227 Crores Hawala Seized |2 Accused Arrested Nilgiris

₹2.227 கோடி ஹவாலாபணம் போலீஸ் பறிமுதல் | ₹2.227 Crores Hawala Seized |2 Accused Arrested Nilgiris

₹2.227 கோடி ஹவாலா பணம் போலீஸ் பறிமுதல் | ₹2.227 Crores Hawala Seized | 2 Accused Arrested | Nilgiris கர்நாடகாவில் இருந்து காரில் கேரளா மாநிலத்திற்கு ஹவாலா பணம் கடத்திச் செல்வதாக கேரளா மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சுல்தான் பத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் நாயர், எஸ்ஐ ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார், தமிழக எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் தகரப்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு வந்த காரை போலீசார் சோதனையிட்டனர். காரின் பின்பக்கம் ரகசிய அறை அமைத்து அதனுள் பணம் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். கார் ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் தாள்கள் 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரம் பதுக்கப்பட்டிருந்தது. விசாரணையில் காரில் பதுக்கி கடத்தி வரப்பட்டது ஹவாலா பணம் என தெரியவந்தது. கார், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் வயநாடு சுல்தான் புத்தேரி முல்லங்குன்னு பகுதியைச் சேர்ந்த அர்ஷாத், கோழிக்கோடு கொடுவல்லி மதரஸா நகர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மே 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !