காரில் தொங்கி கடத்தல்காரர்களை பிடித்த வேல்முருகனின் துணிச்சலுக்கு குவியும் பாராட்டு | Coimbatore
காரில் தொங்கி கடத்தல்காரர்களை பிடித்த வேல்முருகனின் துணிச்சலுக்கு குவியும் பாராட்டு | Coimbatore | 40-Km Thrill Chase | Police Nab Kidnappers கோவை, கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேசன் கெட் கான்ஸ்டெபிள் வேல்முருகன் மற்றும் எஸ்ஐ விக்னேஷ் இருவரும் விளாங்குறிச்சி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரின் பின் இருக்கையில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்ட எஸ்ஐ விக்னேஷ் ஆய்வு செய்ய முற்பட்டார். காரில் இருந்தர்கள் எஸ்ஐயை தள்ளி விட்டு காரில் பறந்தனர். தப்ப முயன்றதைக் கண்ட கெட் கான்ஸ்டெபிள் வேல்முருகன், ஓடும் காரின் மேற்கூரையின் (Roof) மீது பாய்ந்து காரைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். கடத்தல்காரர்கள், காரை நிறுத்தாமல் கணியூர் டோல்கேட்டை சுங்கச்சாவடி தடைகளை உடைத்துக் கொண்டு சென்றனர். காரின் பின்னாலேயே கணியூர் போலிஸ் ரோந்து வாகனம், மற்றும் ஆம்புலன்ஸ் நண்பர்கள் ஒன்றிணைந்து காரைத் துரத்தினர். அவிநாசி போலீஸார் அன்னபூர்ணா ஓட்டல் அருகே ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை நிறுத்தி காரை மடக்கினர். காரை நிறுத்தியதும் இருவர் தப்பிய நிலையில், ஒருவர் சிக்கினாா். பின்னர் தப்பியோடிய மற்ற இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் இருந்து 300 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து கோவையில் கைமாற்ற முயன்றது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த கோவில்பாளையம் போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் 300 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்தனர். உயிரைப் பொருட்படுத்தாமல் காரின் கூரையில் 40 கிலோமீட்டர் தூரம் தொங்கி கடத்தல்காரர்களைப் பிடித்த கெட் கான்ஸ்டெபிள் வேல்முருகனுக்கும், அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் நண்பர்களுக்கும் பாராட்டு குவிகிறது.