ஸ்ட்ராங்க் மேன் பட்டத்தை வென்ற 82 வயது பாட்டி...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்து கவுண்டர் அவன்யுவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள். இவரது மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோர் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் வசித்து வருகின்றனர். ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள நிலையில்,வார இறுதி நாட்களில் பாட்டி கிட்டம்மாள் பல்லடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வரும்போது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசைபட்டுள்ளார். இரண்டு பேரன்களின் உதவியால் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியிலேயே 50 கிலோ எடை துாக்கி ஐந்தாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.