17,357 அடி உயர எவரெஸ்ட் பேஸ் கேம்பில் தேசியக்கொடி ஏந்திய சிறுமி
17,357 அடி உயர எவரெஸ்ட் பேஸ் கேம்பில் தேசியக்கொடி ஏந்திய சிறுமி | A girl feat in climbing Mount Everest கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ராம் குமார், திவ்யா தம்பதியின் 8 வயது மகள் யாழினி. நான்காம் வகுப்பு படிக்கிறார். இவரது தாயார் திவ்யா கல்லூரி காலங்களில் மலையேற்ற சாகசங்களில் ஈடுபட்டு வந்தார். இவரது பயிற்சியாளர் ப்ரெட்ரிக். இவர் சமீபத்தில் எட்டு பேரை எவரெஸ்ட் சிகரம் அழைத்து சென்றார். அவர்களில் எட்டு வயது சிறுமி யாழினியும் ஒருவர். தனது உறுதியான துணிவால் அவர்களுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறினார். 12 நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தின் 17,357 அடி உயரத்தில் அமைந்துள்ள பேஸ் கேம்ப் எனும் அடிப்படை முகாமை எட்டு வயதான யாழினி அடைந்து அனைவரையும் வியக்க வைத்தார். பேஸ் கேம்ப் பகுதியில் தேசியக்கொடி ஏந்தி சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சிறுமியின் சாதனை பயணம் தொடர வேண்டும் என பலரும் வாழ்த்தினர்.