/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 5,000 புத்தகத்தால் புத்தக வடிவ உருவம் உருவாக்கி அசத்தல் | Coimbatore | A world record event
5,000 புத்தகத்தால் புத்தக வடிவ உருவம் உருவாக்கி அசத்தல் | Coimbatore | A world record event
கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் என்.எஸ்.எஸ் சார்பில், கொடுப்பதில் மகிழ்ச்சி எனும் பெயரில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. 2,000 க்கும் மேற்பட்ட என்.எஸ். எஸ் மாணவ மாணவியர், அனைவருக்கும் கல்வி என்ற மனித உருவ வடிவமைப்பில் நின்று கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர். 5,000 புத்தகத்தை கொண்டு புத்தக வடிவில் உருவம் உருவகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர், என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் ராதா, கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா ஆகியோர் பங்கேற்றனர்.
செப் 04, 2024