முதுமலையில் கூட்டமாக பறந்து செல்லும் இளம் பச்சை வண்ண பட்டாம்பூச்சி | A young green butterfly
முதுமலையில் கூட்டமாக பறந்து செல்லும் இளம் பச்சை வண்ண பட்டாம்பூச்சி| A young green butterfly | Nilgiris நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வரும் சுற்றுலா பயணிகள் வன விலங்குகள், பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். அதேபோன்று சீசன் காலங்களில் கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும் பட்டாம்பூச்சிகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதன் முறையாக முதுமலையில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்ற தன்னார்வலர்கள் கூறுகையில், நீலகிரியில் காணப்படும் பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் முதுமலையில் காண முடிந்தது. இதில் சில வகை பட்டாம்பூச்சிகள் சீசன் காலங்களில் கூட்டம் கூட்டமாக பார்க்க முடியும் என்றனர். இந்நிலையில் முதுமலை மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இளம் பச்சை வண்ணத்தில் பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்கின்றன. இதன் அழகை சுற்றுலா பயணிகள் வியப்புடன் ரசித்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில், கோடை மழையை தொடர்ந்து பசுமைக்கு மாறியுள்ள வனப்பகுதியில் இளம் பச்சை வண்ணத்தில் கூட்டம் கூட்டமாக செல்லும் பட்டாம்பூச்சிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளது. எனவே முதுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.