உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்டம் தோறும் உடற்பயிற்சி கூடங்கள் ₹9.78 கோடியில் நவீன மயம் | AC Gym Opening Soon | Covai

மாவட்டம் தோறும் உடற்பயிற்சி கூடங்கள் ₹9.78 கோடியில் நவீன மயம் | AC Gym Opening Soon | Covai

மாவட்டம் தோறும் உடற்பயிற்சி கூடங்கள் ₹9.78 கோடியில் நவீன மயம் | AC Gym Opening Soon | Covai கோவை நேரு விளையாட்டு அரங்கில் குளிர் சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. மாவட்ட விளையாட்டு வளாகங்களில் குளிர்சாதன வசதியுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கவும், உடற்பயிற்சிக் கூடம் இருக்கும் இடங்களில் நவீனப்படுத்தவும் அரசு சார்பில் 9 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் இப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக கோவை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள வளாகத்தில் 2,000 சதுரடியில், குளிர்சாதன வசதியுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. இம்மாத இறுதிக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நேரு விளையாட்டு அரங்கில் உள்ள விளையாட்டு விடுதி மாணவர்கள் 60 பேருக்கு முன்னுரிமை தரப்பட உள்ளது. தொடர்ந்து பொதுமக்களும் இந்த உடற்பயிற்சிக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்றுநர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். பொதுமக்கள் பயிற்சி பெறுவதற்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்தார்.

நவ 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை