நம்மூர் குளத்தில் ஆகாயத்தாமரையை கட்டுப்படுத்துவது எப்படி? Coimbatore
தமிழகம் முழுவதும் எல்லா நீர்நிலைகளிலும் ஆகாயத்தாமரை வளர்ந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நம்மூரில் வாலாங்குளத்திலும் ஆகாயத்தாமரை வளர்ந்திருக்கிறது. இது நல்லதா அல்லது கெட்டதா என்று கேட்டால் நல்லது என்றும் சொல்லலாம். கெட்டது என்றும் சொல்லலாம். நல்லது எப்படி என்றால் கழிவு நீரில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளன. அவற்றின் வாயிலாக ஆகாய தாமரை வளருகின்றன. அவை வளர்ந்துள்ள நீர்நிலைகளில் துர்நாற்றம் இருக்காது. கெட்டது எப்படி என்றால், ஆகாயதாமரை அடர்த்தியாக வளருவதால் சூரிய வெளிச்சம் வராததால் நீர் மோசமாக மாசடையும். அந்த தண்ணீரில் ஆக்சிஜன் இல்லாததால் மீன்கள் வளராது. படகுகளை இயக்க முடியாது. எனவே குளத்தில் ஆகாயத்தாமரைகளை கட்டுப்படுத்துவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.