உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விரிவாக்கத்துக்கு காத்திருக்கும் கோவை விமான நிலையம்

விரிவாக்கத்துக்கு காத்திருக்கும் கோவை விமான நிலையம்

ஒரு நகரின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது விமான நிலையம் தான். அதுபோல கோவையின் தொழில் வளர்ச்சிக்காக விமான நிலைய விரிவாக்கம் காத்திருக்கிறது. இதற்கு தேவையான நிலம் 95 சதவீதம் கையகப்படுத்தியிருந்தாலும் அதை ஒப்படைப்பதில் மத்திய-மாநில அரசுகளிடையே உள்ள சில கொள்கை மாறுபாடுகளால் விமான நிலைய விரிவாக்கம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., இந்த பிரச்னையை தீர்த்து வைப்பார் என்று கோவை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கோவை மக்களிடையே எகிறும் இந்த எதிர்பார்ப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !