உணவுக் குழாய் புற்றுநோயை கண்டறியும் ஏ.ஐ., டெக்னாலஜி
கோவை,திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஒரு லட்சம் ஆண்களில் 7 பேருக்கு உணவு குழாய் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கடந்த 2018 ம் ஆண்டு அரசு அளித்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது இரு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கல்வி நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இவர்களுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. உணவு குழாய், இரைப்பை மற்றும் பெருங்குடலில் வரும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தமிழகத்திலேயே கோவை ஜெம் ஆஸ்பத்திரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.