கவலை அளிக்கும் மண் திட்டு... ஏரி முழு கொள்ளளவை எட்டுமா ?
கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் அக்ரஹார சாம குளம் 165 ஏக்கரில் அமைந்துள்ளது. கோவை வடக்கு பகுதியில் அக்ரஹார சாமக்குளம் முக்கியமானது. கவுசிகா நீர் கரங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து இந்த குளத்தில் களப்பணி ஆற்றி வருகின்றனர். இது அத்திக்கடவு--அவிநாசி திட்டத்தில் உள்ளது. அக்ரஹார சாமக்குளம் வாயிலாக சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த குளம் முழு கொள்ளளவை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் குளத்தின் ஒரு பகுதியில் மண் திட்டாக உள்ளது. இந்த மண் திட்டுகளை அகற்றி கரையை பலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். தூர்வாரும் பணிக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். இவற்றை செய்தால்தான் குளம் முழு கொள்ளளவு நீரை எட்டும் என்பதால் அதற்கான கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.