குடிநீர் தேவைக்காக 5 நாட்களுக்கு 328.32 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும் | Amaravathi Dam Water
குடிநீர் தேவைக்காக 5 நாட்களுக்கு 328.32 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும் | Amaravathi Dam Water release | drinking water is required திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய தேவைக்காக அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடிநீர் திறந்து விடப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் 172.80 கன அடி நீர் திறந்து விடப்படும். அடுத்த மூன்று நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 600 கன அடி வீதம் 155.52 மில்லியன் கன அடி என மொத்தம் 328.32 கன அடி நீர் திறந்து விடப்படும். அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடி. தற்போது 39.50 அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 44 கன அடியாகவும், வெளியேற்றம் 1,000 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பை பொறுத்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது.