ஒரு இடம்; மூன்று மையம் | நெருக்கடியில் அங்கன்வாடி | Coimbatore
கோவை கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் எஸ் எஸ் கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, லட்சுமணன் வீதி என நான்கு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வந்தன. இவை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மிகவும் சிதலமடைந்து எலி தொல்லையும் அதிகமாக இருந்தது. இதை அடுத்து ஈஸ்வரன் கோயில் வீதி மற்றும் பெருமாள் கோவில் வீதிக்கான இரு மையங்கள் இடிக்கப்பட்டன. இந்த மையங்களில் பராமரிக்கப்பட்ட குழந்தைகள் எஸ்.எஸ். கோயில் வீதி மையம் மற்றும் லட்சுமணன் வீதி மையங்களில் சேர்த்து பராமரிக்கப்படுகின்றனர் . ராமசாமி வீதி, பி.கே.செட்டி வீதி மையங்களுக்கு சொந்த கட்டடம் இல்லாததால் இவ்விரு மையங்களையும் சேர்ந்த குழந்தைகளும் இங்கு தங்க வைக்கப்படுகின்றனர். இதன் படி ஒவ்வொரு மையத்திலும் மூன்று மையத்துக்கான குழந்தைகள் இருக்கின்றனர். இதில் லட்சுமணன் வீதி மையம் மட்டும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதே போல மற்ற மையங்களும் விரைந்து கட்டிக் கொடுக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.