'ஏபிசி' கண் துடைப்பு நாடகமா ? | Increase in street dogs | ABC program working? | People struggling w
ஏபிசி கண் துடைப்பு நாடகமா ? | Increase in street dogs | ABC program working? | People struggling without a solution | Coimbatore கோவையில் பல ஆண்டுகளாக தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அனிமல் பெர்த் கன்ட்ரோல் (Animal Birth Control) மற்றும் ஆன்டி- ராபீஸ் வாக்சினேஷன் (Anti-Rabies Vaccination) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் தெருநாய்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், ABC திட்டம் பலன் அளிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ABC பணிகளுக்கான NGO தேர்வில் பதிவு மட்டுமின்றி, கால்நடை மருத்துவ வசதி, அனுபவம், அறுவை சிகிச்சைத் தரம், சிகிச்சைக்குப்பின் கவனிப்பு மற்றும் முந்தைய செயல்திறன் ஆகியவை நடைபெறுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ABC ஆப்ரேஷன் செய்த பல நாய்கள் மீண்டும் கர்ப்பமடைவதும் தொடர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்தும் முறையான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. நாய்களை கட்டுப்படுத்தும் சேவையில் புதிய அமைப்புகளுக்கு வாய்ப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், மக்கள் நிதியில் நடைபெறும் திட்டங்களில் தகுதியும் தரமும் முதன்மையாக இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளின் ABC திட்டத்தை தன்னிச்சையாக மதிப்பீடு செய்து, இதுவரை எத்தனை நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செய்யப்பட்டது. எவ்வளவு நிதி செலவிடப்பட்டது. தெருநாய்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன. போன்ற விவரங்கள் வார்டு வாரியாக வெளிப்படையான அறிக்கையை மாநகராட்சி மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். ABC நடைபெறுகிறது என்பது முக்கியமல்ல. தெரு நாய்களின் எண்ணிக்கையும், வெறிநாய் அச்சமும் குறைகிறதா என்பதே இத்திட்டத்தின் உண்மையான வெற்றியாகும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.