அடிப்படை வசதிக்கே அல்லல்படுகிறோம்
கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சியில் உள்ள அண்ணாநகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இடத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு குடிநீர், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அங்குள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் படும் அவஸ்தை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூன் 08, 2025