உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஓடியாங்க...ஓடியாங்க...! கிணத்துக்குள்ள பிரேதம் கிடக்குதாம்... கடைசியில இப்படி ஒரு ட்விஸ்ட்டா

ஓடியாங்க...ஓடியாங்க...! கிணத்துக்குள்ள பிரேதம் கிடக்குதாம்... கடைசியில இப்படி ஒரு ட்விஸ்ட்டா

அன்னூர் அருகே அல்லிக்காரம்பாளையத்தில், ஊராட்சிக்கு சொந்தமான, 120 அடி ஆழ கிணறு உள்ளது. இதில், 118 அடிக்கு தண்ணீர் உள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு இந்த கிணற்றில் ஒரு பெண் குதித்ததாக ஒருவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். தினமும் காலை 7 :00 மணிக்கு தொடங்கி இரவு 11:00 மணி வரை தண்ணீரில் இறங்கி பிரேதத்தை தேடினர். கிணற்றில் இருக்கும் தண்ணீரை மோட்டார் வைத்து இறைத்து வெளியேற்றி அதன் பிறகு சேற்றிலும் இறங்கி தேடிப் பார்த்தனர். எனினும் பிரேதம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இந்த பரபரப்பான சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ