உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மைதானத்தை அழித்து பூங்கா அமைக்க எதிர்ப்பு | Arranging to set up a park

பள்ளி மைதானத்தை அழித்து பூங்கா அமைக்க எதிர்ப்பு | Arranging to set up a park

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நெல்லியாளம் நகராட்சி மூலம் 91 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது. பந்தலூர் பஜாரை ஒட்டிய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தை கையகப்படுத்தி அங்கு பூங்கா அமைக்கும் பணி துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளி வளாகத்தில் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் அறிவிப்பு பலகை வைத்ததுடன் விளையாட்டு மைதானத்தை ஒட்டி பூங்கா அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. இதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இந்த பகுதியை கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் ஆய்வு செய்தார். விளையாட்டு மைதானமாக உள்ள இடத்தில் பூங்கா அமைத்தால் மாணவர்களின் விளையாட்டு கனவு பாழ்படும். எனவே ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தி அங்கு பூங்கா அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேம்பாட்டு வளர்ச்சிப் பணி எனக்கூறி கட்டிங், கமிஷன் அடிப்படையில் மக்கள் வரிப்பணத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் சூறையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மார் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ