பென்சில் ஓவியத்தில் கலக்கும் சென்னை இல்லத்தரசி தரும் டிப்ஸ் | Art skills | house wife's life
சென்னையை சேர்ந்த இல்லத்தரசி சுதா பரிமளா தேவி. வீட்டில் இருந்தே பென்சில் ஓவியம் வரைவதில் அசத்தி வருகிறார். முன்பு பள்ளி பருவத்தில் ஓவியம் வரைந்து பரிசு வென்ற அனுபவம் கொண்டவர். இல்லத்தரசி ஆன பிறகு மீண்டும் தனது திறமையை தூசி தட்டினார். நேரம் கிடைக்கும் போது கண்ணில் பட்டதை தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகிறார். இது மன இறுக்கத்தை தளர்த்துவதாக மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் சுதா. வீட்டிலேயே இருக்கும் பெண்கள் தங்கள் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு ஓவியம் வரைவது, கைவினை பொருட்கள் செய்வது என்று ஏதாவது ஒரு பழக்கத்தை வைத்திருக்க வேண்டும். கோலம் போடுவது கூட பயிற்சி தான். பிடித்த கோலத்தை ரசித்து போடுவதன் மூலம் மனநிறைவும் கிடைக்கும். ஆனால் கோலத்துக்கு பதில் இப்போது ஸ்டிக்கர் ஒட்டி விடுகின்றனர் என்று வேதனை தெரிவித்தார் சுதா.