'துரு'வால் நடந்த அதிசயம் | நெருப்பால் உருவான ஓவியம்
கோவையை சேர்ந்த ஓவியர் வசந்தகுமார் பயர் ஆர்ட் என்ற புதிய கான்செப்டில் ஓவியம் வரைந்துள்ளார். அதாவது ஒவ்வொரு பொருளை எரிக்கும் போதும் ஒரு நிறம் வெளிப்படும். அதை வைத்து அவர் ஓவியம் வரைந்துள்ளார். எந்தெந்த பொருளை எரித்தால் எந்த நிறம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி ஓவியங்களை வரைந்துள்ளார். இதே போல நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சசிகுமார் என்ற ஓவியர் இரும்பு துருவைக் கொண்டு ஓவியம் வரைந்துள்ளார். ஓவியம் வரைவதற்காக புதிய பொருளை தேடி கண்டுபிடிக்கும் புதுமை ஓவியர்களின் திறமைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 16, 2025