உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நூற்றுக்கும் மேற்பட்ட கண்கவர் அரங்குகள் | Asthivaram building expo | udumalaipet

நூற்றுக்கும் மேற்பட்ட கண்கவர் அரங்குகள் | Asthivaram building expo | udumalaipet

உடுமலைப்பேட்டை தேஜஸ் மஹாலில் அஸ்திவாரம் மாபெரும் கட்டுமான கண்காட்சி துவங்கியது. அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் மற்றும் உடுமலை தமிழிசைச் சங்கம் இணைந்து நடத்தும் கண்காட்சியை பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி துவக்கி வைத்தார் புதிய தொழில்நுட்பங்கள், இன்டீரியர் டெக்கரேஷன், பர்னிச்சர், வங்கி கடன் ஆலோசனை உள்ளிட்ட பிரத்தியேக அரங்குகள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியை அணுஜ் டைல்ஸ், அரவிந்த் கபில் செராமிக்ஸ், ஏவிபி நிறுவனம் மற்றும் மீவிஷ் இன்டீரியர்ஸ் வழங்குகின்றனர். தினசரி மாலை 5 மணிக்கு விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்குகேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் . கலை நிகழ்ச்சிகளை உதய கிருஷ்ணா நெய், நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி ஸ்கூல், கற்பகம் யூனிவர்சிட்டி மற்றும் பில்டர்ஸ் இன்ஜினியரிங் காலேஜ் குழுமத்தினர் வழங்குகின்றனர். இன்று துவங்கிய கண்காட்சி ஜனவரி 5 ஆம் தேதி முடிவடைகிறது. தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை