/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நிறைவேறியது கனவு | அத்திக்கடவு அவிநாசி திட்டம் | Athikadavu-Avinashi project
நிறைவேறியது கனவு | அத்திக்கடவு அவிநாசி திட்டம் | Athikadavu-Avinashi project
தமிழகத்தில் விவசாயத்துக்கான முதல் நீரேற்று திட்டமான அத்திக்கடவு அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் வாயிலாக கோவை, திருப்பூர் ,ஈரோடு, மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்ப 1,916 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறைவடைந்துள்ளது. விவசாய பயன்பாட்டுக்கு பம்பிங் வாயிலாக நீர் விநியோகிப்பது இதுவே முதல்முறை. பவானி ஆற்றில் உபரியாக வெளியேறும் நீரை காளிங்கராயன் அணைக்கட்டுப்பகுதியில் தேக்கி, ஆண்டுக்கு 70 நாள் வினாடிக்கு 250 கன அடி வீதம், 1.5 டி.எம்.சி., நீரை பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 6 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளன. அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவடைந்தது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 26, 2024