உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 64 மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

64 மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

64 மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு | Athlatics sports | inter corporation school students participate| covai கோவை மாநகாாட்சி பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநகராட்சி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை சார்ந்த 64 பள்ளிகளில் இருந்து 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நேரு ஸ்டேடியத்தில் மாணவர் குழு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த 6ம் தேதி கோ - கோ, கபடி, ஏறிபந்து, கையுந்து பந்து, இறகு பந்து, சதுரங்கம், கேரம் ஆகிய குழுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 1964 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கராத்தே, டேக்வாண்டோ, ஜூடோ, சிலம்பம், டேக்வாண்டோ, களரி உள்ளிட்ட போட்டிகளில் 627 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிகள் மாநகராட்சியின் பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்டது. தடகளப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 983 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை கலெக்டர் பவன் குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடப்பது குறிப்பிடத்தக்கது.

பிப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ