தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மூத்த வீரர் மனோகரன், வீராங்கனை ராதாமணி | Athletics senior persons
தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மூத்த வீரர் மனோகரன், வீராங்கனை ராதாமணி | Athletics senior persons achievement திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த மனோகரன், வயது 60 மற்றும் ராதாமணி வயது 61. இருவரும் மூத்த தடகள வீரர்கள். மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று எண்ணற்ற பதக்கங்களை இருவரும் குவித்து வருகின்றனர். இலங்கையில் கடந்த 24 முதல் 29 வரை நடந்த மிக மூத்தோர் பிரிவு சர்வதேச தடகள போட்டியில் இந்தியா சார்பில் மனோகரன் பங்கேற்றார். இதில் தடகள சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். அதேபோல் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த தேசிய தடகள போட்டியில் ராதாமணி கலந்து கொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இதன் மூலம் இருவரும் இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். இருவரையும் பாராட்டும் விதமாக மாவட்ட ஹாக்கி சங்கம், உடுமலை மூத்த ஹாக்கி வீரர்கள், வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் ஹாக்கி வீரர்கள், எஸ் வி புரம் சேரன் கபடி குழு, வேலவன் பேட்மிட்டன் அகாடமி, பாஜக மற்றும் உடுமலையின் அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பாக பாராட்டு விழா நடந்தது. மூத்த தடகள வீரர்கள் மனோகரன் மற்றும் ராதாமணியை திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து மைதானம் வந்தனர். அங்கு இருவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.