100 பேர் ஆர்வம்| Divisional Tournament| Sports | Athletics | Covai
100 பேர் ஆர்வம்| Divisional Tournament| Sports | Athletics | Covai கோவை நேரு ஸ்டேடியத்தில் ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்கான மண்டல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஜிஎஸ்டி மற்றும் சென்ட்ரல் எக்சர்சைஸ் டெக்கரேஷன் கிளப் சார்பில் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளை ஜிஎஸ்டி மற்றும் சென்ட்ரல் எக்சர்சைஸ் கமிஷனர் தினேஷ் பங்கர் மற்றும் ஜெயபாலசுந்தரி துவக்கி வைத்தனர். ஆண்களுக்கான போட்டி 30 வயது முதல் 60 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்தது. பெண்களுக்கான போட்டிகள் 35 வயது முதல் 60 வயது வரையிலான பிரிவுகளில் நடத்தப்பட்டது. 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்ட பந்தயம், 800 மீட்டர் நடை பயணம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.