சூரிய கூடார உலர்த்தியில் கொப்பரை கெடாது! வீணாகாது!
கோவை மாவட்டத்தில் குறிப்பாக பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம் நடக்கிறது. தேங்காயை அப்படியே விற்பதை விட மதிப்பு கூட்டிய பொருளாக விற்றால் அதிக வருவாய் ஈட்ட முடியும். குறிப்பாக தேங்காயிலிருந்து கொப்பரையாகவும், கொப்பரையிலிருந்து எண்ணை எடுத்தும் விற்கப்படுகிறது. தற்போது கொப்பரை சூரிய கூடார உலர்த்தியில் காய வைக்கப்படுகிறது. இந்த உலர்த்தியை அமைக்க வேளாண் பொறியியல் துறை உதவி செய்கிறது. இதற்காக மானியமும் அளிக்கப்படுகிறது. இதில் கொப்பரை மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளையும் வைத்து உலர்த்தலாம். இந்த சூரிய கூடார உலர்த்தியை எப்படி அமைப்பது, அதன் பயன்கள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 07, 2024