ஜனாதிபதி தேநீர் விருந்துக்கு அழைப்பு டில்லி செல்லும் பெண் ஆட்டோ ஓட்டுநர்
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சங்கீதா ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கணவர் பாலாஜி. சங்கீதாவின் தாத்தாவுக்கு பூர்வீக நிலம் இருந்தபோதும், பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் அந்த நிலத்தில் வீடு கட்ட முடியாமல் தவித்தார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும், அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் வாயிலாக வீடு கட்டும் திட்டத்துக்கு அவர் விண்ணப்பித்து மானியத் தொகை 2.30 லட்சம் ரூபாய் பெற்றார். கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியிலிருந்தும் கடன் தொகை பெற்று, சொந்தவீட்டுக்கனவை நிறைவேற்றினார். உழைப்பு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட சங்கீதாவுக்கு, குடியரசு தின விழாவில் நடைபெறும் பேரணியை காணவும், ஜனாதிபதியுடன் தேநீர் விருந்தில் பங்கேற்கவும் அழைப்பு கிடைத்துள்ளது. கடின உழைப்பிற்கும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வாழ்க்கை மாறியது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.