உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அவிநாசி சாலையில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு! சாலையில் நடந்து செல்லும் அவலம்

அவிநாசி சாலையில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு! சாலையில் நடந்து செல்லும் அவலம்

கோவை நவ இந்தியா, பீளமேடு, ஹோப்காலேஜ், சிட்ரா, கே.எம்.சி.ஹெச்.,மருத்துவமனை அருகில் என அவிநாசி சாலையின் பல இடங்களில் மக்கள் பயன்படுத்தும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், மக்களுக்கு இடையூறாக அமையும் என்பதை சற்றும் யோசிக்காமல் வாகனங்களை பார்க் செய்து விடுகின்றனர். இதில், வாகனங்களை நிறுத்தக்கூடாது என போலீசார் எச்சரிக்கை பலகை வைத்தும் யாரும் அதை கண்டு கொள்வதே இல்லை. நடைபாதை ஆக்கிரமிக்கப்படுவதால், சாலையை கடக்க முடியாமல் பாதசாரிகள் திணறுகின்றனர். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் சாலையில் நடந்து செல்லும் அவலம் ஏற்படுகிறது. இதனால், எந்த நேரத்திலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி