உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனங்களுக்கு பின்னால் ஓடி சென்றதால் பரபரப்பு| baby elephant seperated from its mother | pandalur

வாகனங்களுக்கு பின்னால் ஓடி சென்றதால் பரபரப்பு| baby elephant seperated from its mother | pandalur

தமிழக எல்லையான பந்தலூர் அருகே கேரளா மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே உள்ளது தோல்பட்டி வனப்பகுதி. இங்கு நேற்று மாலை யானை குட்டி ஒன்று சாலையில் உலா வந்தது. சாலையில் செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்களின் பின்னால் தாயைத் தேடி ஓடி சென்றது. வாகன ஓட்டுனர்கள் யானை குட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வாகனங்களை மெதுவாக இயக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாயை பிரிந்து தவித்த யானை குட்டியை மீட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு தாய் யானை, குட்டியை வந்து அழைத்து செல்வதற்காக வனக்குழுவினர் சாலையோர வனப்பகுதியில் குட்டியுடன் காத்திருக்கின்றனர். இச்சம்பவம் மானந்தபாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை