31 ICSE பள்ளிகள் பங்கேற்பு | Badminton tournament | Pollachi
இறகுப்பந்து விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், இறகுப்பந்து விளையாட்டு குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி திஷா பள்ளி சார்பில் ICSE பள்ளிகளுக்கு இடையேயான மாநில இரண்டு நாள் இறகுப்பந்து போட்டி நேற்று துவங்கியது. மாணவிகள் மட்டுமே பங்கேற்ற இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 31 பள்ளிகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 14 வயது, 17 வயது மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று முன்னேறிய அணிகளுக்கான அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 14 வயது இரட்டையர் பிரிவில் சென்னை SPS இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த சமிஸ்கா,ஷிவானி பிரேமி முதலிடம் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் கோவை பாரதி பள்ளியைச் சேர்ந்த வைஷ்ணவி, வினோஷ்கா முதலிடம் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் மதுரை லட்சுமி பள்ளியைச் சேர்ந்த காவியா, மிர்தினி முதலிடம் பெற்றனர்.